கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 1

பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன.

அவற்றை

1. 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள்
2. 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள்
3. 11 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள்

என மூன்று வகையான பள்ளிகள் மட்டுமே உள்ளவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களும் பணியாற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் [AEEO – Elementary] அவர்களாலும், மாவட்ட அளவில் தொடக்கப் பள்ளிகள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் [DEEO – Elementary] அவர்களாலும், மாவட்ட அளவில் உயர்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (உயர்நிலை) [DEO – Secondary] அவர்களாலும், மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (மேல்நிலை) [DEO – Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

சுமார் 75 பள்ளிகளுக்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் என்ற வகையில் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது பள்ளிகளைத் திறம்பட நிர்வகி்க்கவும், பள்ளிகளின் தரத்தைப் பார்வையிடவும், மாணவர்கள்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தவும், மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தினை உயர்தவும் உதவியாக இருக்கும்.

மாவட்ட அளவில் அனைத்து வகைப் பள்ளிகளும் முதன்மைக் கல்வி அலுவலர் [CEO] அவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

மாநில அளவில் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குநர் [Director – Elementary] அவர்களாலும், மாநில அளவில் உயர்நிலைப் பள்ளிகள் உயர்நிலைக் கல்வி இயக்குநர் [Director – Secondary] அவர்களாலும், மாநில அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மேல்நிலைக் கல்வி இயக்குநர் [Director – Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தொடக்கப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது மூன்று இடைநிலை ஆசிரியர், ஒரு தமிழாசிரியர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது ஐந்து பட்டதாரி ஆசிரியர், ஒரு தமிழாசிரியர், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு இளநிலை உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது ஆறு முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு உதவியாளர், ஒரு ஆய்வக உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

Advertisements
Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக

வணக்கம் தமிழா!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in பகுக்கப்படாதது | 1 பின்னூட்டம்